உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஒருவரை தாக்கிய இருவர் கைது

ஒருவரை தாக்கிய இருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரைச் சேர்ந்த ஜெகதீசன் மகன் அசோக், 34; கட்டுமான நிறுவன ஊழியர். இவருக்கு, வாயக்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்த கணேஷ் மகன் பாலாஜி, 27; கருணாபுரம் காலனியைச் சேர்ந்த கலியன் மகன் ஆரோக்கியதாஸ், 30; ஆகியோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது.இந்நிலையில், அசோக்கிடம் இருவரும் அவசரமாக பணம் தேவை என கேட்டனர். அப்போது அவர் தனது, மனைவியின் தாலியில் இருந்த நகையை கழற்றிக் கொடுத்தார். அதனை அடகு கடையில் வைத்து, 4,500 ரூபாய் பெற்றனர். அசோக் நகையை திருப்பி கேட்ட போது, இருவரும் நகையை விற்றது தெரிந்தது. இதுகுறித்து கேட்டபோது, இருவரும் அசோக்கை திட்டி தாக்கினர். புகாரின் பேரில், பாலாஜி, ஆரோக்கியதாஸ் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி