உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்கூடம்

பராமரிப்பின்றி பாழாகும் பயணிகள் நிழற்கூடம்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் உள்ள பயணிகள் காத்திருப்போர் கூடம் முறையாக பராமரிப்பு இல்லாததால் பாழாகி வருகிறது. மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் கடந்த 2022–23ம் ஆண்டு தி.மு.க., சார்பில் பயணிகள் காத்திருப்போர் கூடம் கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் அனைத்து நாற்காலிகளும் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டுள்ளது. மேலும், இரவில் மது அருந்தும் இடமாகவும், உள்ளது. இதனால், பஸ் நிறுத்தத்தில் பயணிகள் காத்திருந்த பஸ் ஏற அச்சமடைகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள் பயணிகள் நிழற்கூடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ