உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வி.புத்துார் பால கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

வி.புத்துார் பால கோபால சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துர் பாலகோபால சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு புண்யாஹம், கோபூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடானது தொடர்ந்து, திருக்கோவிலுார் ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில், கண்ணன் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்ட வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க மூல கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. ந கராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவின் நேர்முக உதவியாளர் பூம்பொழிலன், கோவில் அறங்காவலர் எழிலரசன், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் விழாவிற்கான ஏற்பாடு களை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !