சங்கராபுரத்தில் காய்கறிகள் விலை உயர்வு
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் காய்கறிகள் விலை கிடு கிடு என உயர்ந்தது. சங்கராபுரத்தில் கடந்த வாரம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.50க்கும், ரூ.60க்கு விற்ற அவரை ரூ.80க்கும், ரூ.60க்கு விற்ற பாகற்காய் ரூ.80க்கும், ரூ.40க்கு விற்ற கத்திரிகாய் ரூ.60க்கும், ரூ.40க்கு விற்ற புடலங்காய் ரூ.60க்கும், ரூ.30க்கு விற்ற முள்ளங்கி ரூ.40க்கு என பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. பெங்களூரில் கடந்த 15 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக, காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக சங்கராபுரம் வியாபாரிகள் தெரிவித்தனர். திடீர் விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.