உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஊர்க்காவல் படையில் சேர நேர்முகத் தேர்வு

ஊர்க்காவல் படையில் சேர நேர்முகத் தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது, ஊர்க்காவல் படையில் 26 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு, 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்த, 20 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.மொத்தமாக 146 பேர் விண்ணப்பித்த நிலையில், தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் நேர்முகத்தேர்வு நேற்று நடந்தது. ஏ.டி.எஸ்.பி., சரவணன், டி.எஸ்.பி., தேவராஜ், வட்டார தலைவர் வசந்த்பாலா, துணை வட்டார தலைவர் சுரேஷ்குமார், ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழுவினர் விண்ணப்பதாரர்களை பரிசோதித்தனர்.நேர்முகத்தேர்விற்கு, 16 பெண்கள் உட்பட 136 பேர் வந்தனர். அங்கு, ஊர்க்காவல் படை வீரர்களின் பணி குறித்து விளக்கப்பட்டது.தொடர்ந்து, ஆண்கள் 167 செ.மீ., உயரமும், 80 முதல் 85 செ.மீ., மார்பளவும் உள்ளதா என அளவீடு செய்யப்பட்டது. அதேபோல், பெண்கள் 155 செ.மீ., உயரம் உள்ளனரா என சோதனை செய்யப்பட்டு, அவர்களின் சான்றிதழ்கள் பெறப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பு, வழக்கு ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யப்படும். அதேபோல், மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், சுருக்கெழுத்து பயிற்சி முடித்தவர்கள் போன்ற கூடுதல் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தேர்வு செய்யப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ