உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மோசடி செய்து நிலம் கிரையம் கிராம மக்கள் புகார்

மோசடி செய்து நிலம் கிரையம் கிராம மக்கள் புகார்

கல்வராயன்மலை தாலுகா, வில்வத்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.மனுவில், வில்வத்தியில் எங்களது முன்னோர்கள் அனுபவித்த நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விளைநிலங்களை, வருவாய்த்துறை பட்டா ஆவணங்களுடன் நாங்கள் அனுபவித்து விவசாயம் செய்து வருகிறோம். சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்குட்பட்ட எங்களது நிலங்களை, கடந்த 1985ம் ஆண்டு ஒரே நாளில் தனி நபர் கிரையம் பெற்றதாக போலி ஆவணம் ஏற்படுத்தி கொண்டுள்ளார். மோசடியாக கிரையம் பெற்ற நபர்கள் எங்களது நிலங்களை எங்களுக்கே தருவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.பணம் தராவிட்டால் வேறொரு மலைவாழ் மக்களுக்கு விற்றுவிடுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. எனவே, மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை