உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவங்கியது

சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து துவங்கியது

திருக்கோவிலுார், : சாத்தனுார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து துவங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் நந்தி துர்கா மலைப்பகுதியில் உருவெடுக்கும் தென்பெண்ணை ஆறு தமிழக எல்லையான கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளை கடந்து சாத்தனுார் அணைக்கு வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து துவங்கியது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 119 அடி, (7,321 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட அணையில் 107.30 அடி (4,937 மில்லியன் கன அடி) நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 833 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் எதுவும் வெளியேற்றப்படவில்லை. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தொட ர்வதால் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என பொதுப்பணித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ