உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மேற்கு மாவட்ட த.வெ.க., காமராஜர் பிறந்த நாள் விழா

மேற்கு மாவட்ட த.வெ.க., காமராஜர் பிறந்த நாள் விழா

கள்ளக்குறிச்சி; வடக்கனந்தலில் த.வெ.க., சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில், வடக்கனந்தல் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜவகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.இதில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டசபை தொகுதி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ