உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏன்? உயர்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்

 லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏன்? உயர்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்

உளுந்துார்பேட்டை: டிச. 20-: கொரோனாவால் லேப் டாப் வழங்குவது தாமதமானது என உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் கூறினார். உளுந்துார்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களிடம் தி.மு.க.,வின் அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அதனை பயன்படுத்தி முன்னேற வேண்டுமென அறிவுறுத்தி பேசினார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறுகையில், '' இந்த ஆண்டு துவங்கப்பட்டதால் தற்போது தற்காலிக இடத்தில் கல்லுாரி இயங்கி வருகிறது. விரைவில் நிரந்தர கட்டடம் கட்டப்படும். தமிழக முதல்வர் ஸ்டாலின், ஏழை மாணவிகளின் படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லுாரி படிப்பிற்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கி உள்ளார். வரும் ஜனவரி மாதம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 4 ஆண்டுகளாக லேப்டாப் வழங்காமல் காலதாமதம் ஏற்பட்டதற்கு கொரோனா தொற்று காரணம். மேலும் நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்காததால் லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது ஓரளவுக்கு சரியான நிலை இருப்பதால் லேப்டாப் வழங்கப்பட உள்ளது என்றார். எம்.எல்.ஏ., க்கள் மணிக்கண்ணன், உதயசூரியன், முன்னாள் எம்.எல்.ஏ.. அங்கையற்கண்ணி, நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், நகர செயலாளர் டேனியல்ராஜ், மாவட்ட் மகளிரணி கலாசுந்தரமூர்த்தி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் மாலதி ராமலிங்கம், மாணவரணி குருராஜ், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை