மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
25-Jun-2025
கள்ளக்குறிச்சி : முடியனுாரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த முடியனுாரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி தீபா, 37; கணவன் மனைவி இருவருக்கும் கடந்த 4ம் தேதி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுந்தரமூர்த்தி சில மணி நேரம் கழித்து திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த தீபா மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து கணவன் சுந்தரமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Jun-2025