உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்...  கட்டப்படுமா?கள்ளக்குறிச்சி அருகே கிராம மக்கள் தவிப்பு

முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்...  கட்டப்படுமா?கள்ளக்குறிச்சி அருகே கிராம மக்கள் தவிப்பு

மூங்கில்துறைப்பட்டு;மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டிலிருந்து புதுப்பட்டுக்கு செல்லும் வழியில் உள்ள முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் இல்லாததால் மழைக் காலங்களில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட் டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சுப்பட்டு விவசாயம் நிறைந்த கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி குமாரமங்கலம், லக்கிநாயக்கன்பட்டி காட்டுகொட்டாய், பவுஞ்சிப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதிகளில் மக்காச்சோளம், நெல், கரும்பு, வேர்க்கடலை, கேழ்வரகு, கம்பு, மரவள்ளி கிழங்கு, கோலியஸ் கிழங்கு ஆகியவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அறுவடை காலங்களில் பயிர்களை விற்பனைக்காக புதுப்பட்டு, சங்கரா புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு கொண்ட செல்ல முஸ்குந்தா ஆற்றைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. மழைக்காலங்களில் முஸ்குந்தா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் 15 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் என பல போராட் டங்கள் நடத்தி யும் அரசு செவிசாய்க்கவில்லை. மழைக் காலங்களில் பள்ளி மாணவர்கள் புதுப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல ஆற்றுத் தண்ணீரில் நீந்தி அக்கரைக்கு செல்கின்றனர். மாணவர்கள் ஆற்றில் நீந்தி செல்வது போல் பல முறை செய்தி வெளியிட்டாலும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கண்டு கொள்வதில்லை. ஆய்வு என்ற பெயரில் இடத்தை பார்வையிட்டு செல்வதோடு சரி. அதன் பின் உயர் மட்டம் பாலம் கட்டுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாமல் காலம் கடத்திச் செல்கின்றனர். பாலம் கட்டுவதற்கான முயற்சியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முயற்சி செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, பொதுக்கள் நலன் கருதி முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே உயர் மட்டம் பாலம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை