உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? வேலைவாய்ப்பு பெருகும் என்பதால் மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? வேலைவாய்ப்பு பெருகும் என்பதால் மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் காகித தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளது. இங்குள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிர் அறுவடை செய்தும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை பெருக்கும் வகையில் பெரிய தொழிற்சாலைகள் இல்லை. இதனால், கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பட்டதாரிகள் வேலைக்காக வெளி மாவட்டத்திற்கு செல்கின்றனர்.மாவட்டத்தில், ரிஷிவந்தியம், மாடாம்பூண்டி கூட்ரோடு, அத்தியூர், குமாரமங்கலம், வெள்ளையூர் ஆகிய பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்கள் வளர்க்கப்படுகிறது. யூகலிப்ட்ஸ் மரத்தின் தண்டுகளில் உள்ள 'செல்லுலோஸ்' என்ற இழைகள் பேப்பர் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக உள்ளது.குறைந்த செலவில் அதிகளவு கூழ் கிடைப்பதாலும், வேகமாக வளரும் தன்மை கொண்டவை என்பதாலும் வனப்பகுதியில் யூகலிப்ட்ஸ் மரங்களை அரசு வளர்க்கிறது. நன்கு வளர்ந்த மரங்கள் அறுவடை செய்து, காகித தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது.கள்ளக்குறிச்சி பகுதியில் அறுவடை செய்யப்படும் மரங்கள் தனியார் ஒப்பந்த லாரிகள் மூலம் கரூர் மாவட்டம், புகழூர் மற்றும் திருச்சி மாவட்டம், மொண்டிப்பட்டி பகுதிகளில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.லாரியில் ஒரு டன் எடை கொண்ட மரத்தை எடுத்துச் செல்ல 700 முதல் 800 ரூபாய் வரை வாடகையாக அளிக்கப்படுகிறது. ஒரு லாரியில் 23 முதல் 25 டன் எடை கொண்ட மரங்கள் எடுத்துச் செல்லப் படும்.இவ்வாறு செய்வதால் போக்குவரத்து செலவு அதிகமாகிறது.இதற்கு பதிலாக அதிக ளவு யூகலிப்ட்ஸ் மரங்கள் வளரும் கள்ளக்குறிச்சி பகுதியில் காகித தொழிற்சாலை அலகு அமைக்கலாம்.இதனால் போக்குவரத்து செலவு கனிசமாக குறைவதுடன், மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். காகிதம் தயாரிக்க பயன்படும் சவுக்கு மரங்களும் விழுப்புரத்தில் அதிகளவு அறுவடை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை