உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பள்ளி, கல்லுாரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சங்கராபுரம் ; சங்கராபுரம் பகுதியில் பஸ் படிக்கட்டு மற்றும் ஏணியில் தொங்கியபடி செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவர்களால் விபத்து அபாயம் உள்ளது.சங்கராபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி, அரசு பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,க்களில் சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர்.பள்ளி, கல்லுாரி நேரங்களில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால், தனியார் பஸ்சில் படிக்கட்டிலும், பஸ்சின் பின்புறம் உள்ள ஏணியிலும் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.இது குறித்து டிரைவர், கண்டக்டர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூறினாலும் கேட்பதில்லை.காவல் துறையினரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லுாரி நேரங்களான காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை