மேலும் செய்திகள்
வாடகை அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கம்
01-Nov-2024
சென்னை - சேலம், கோயம்புத்துார் மார்க்கமாக செல்லும் 'ஏசி', மற்றும் 'ஸ்லீப்பர் கோச்' அரசு பஸ்கள், கள்ளக்குறிச்சி நகர பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் சென்னை, சேலம், கோயம்புத்துார், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தங்கி பணிபுரிகின்றனர். அதேபோல், கல்லுாரி மாணவ, மாணவிகளும் வெளிமாவட்டங்களில் தங்கி படிக்கின்றனர்.இவர்கள் அரசு விடுமுறை மற்றும் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அரசு மற்றும் தனியார் பஸ்களில் சொந்த ஊருக்கு வருகின்றனர். சாதாரண அரசு பஸ்கள் வழித்தடத்தில் உள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்குவதால், நீண்ட துாரம் பயணிப்பவர்கள் சிரமமடைகின்றனர். குறிப்பாக, அரசு பஸ்களில் 'சீட்' நேராக இருப்பதாலும், இருக்கைகளுக்கான இடைவெளி குறைவாக இருப்பதால் நீண்ட நேரம் உட்கார முடியாத நிலை உள்ளது.எனவே, நீண்ட துாரம் பயணிப்பவர்கள், அவசர பணிக்காக செல்பவர்கள், முதுகுவலி உள்ளவர்கள், முதியவர்கள் அரசு 'ஏசி' மற்றும் 'ஸ்லீப்பர் கோச்' பஸ்களை நாடுகின்றனர். ஆனால், 'ஏசி' பஸ் கண்டக்டர்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் செல்லாது, புறவழிச்சாலை அல்லது டோல்கேட்டில் இறங்கி கொள்ளுங்கள் என கூறுகின்றனர். அவசர பணிக்காக செல்பவர்கள் வேறுவழியின்றி மிதவை பஸ்களில் ஏறி, கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அல்லது மாடூர் டோல்கேட்டில் இறங்கி, அங்கிருந்து வேறு வாகனத்தில் பஸ்நிலையத்திற்கு செல்கின்றனர்.மாவட்ட தலைநகராக அந்தஸ்து பெற்று பல ஆண்டுகளாகியும் மிதவை பஸ்கள் கள்ளக்குறிச்சி நகருக்குள் வராமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சென்னை - சேலம், கோயம்புத்துார் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு 'ஏசி' மற்றும் ஸ்லீப்பர் கோச் பஸ்களை கள்ளக்குறிச்சி நகர பகுதி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
01-Nov-2024