மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் கனிம வள கடத்தல் அதிகரிப்பு
25-Sep-2024
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகளில் அதிகளவு மண் அள்ளப்படுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மூங்கில்துறைப்பட்டு, பொரசப்பட்டு, மங்களம், மேல்சிறுவலுார், மணலுார், பாக்கம் புதுார், கடுவனுார், புதுப்பட்டு, ரங்கப்பனுார், லக்கிநாயக்கன்பட்டி, பவுஞ் சிப்பட்டு, வடகீரனுார், சவேரியார் பாளையம், உலகலப்பாடி, அருளம்பாடி, அரும்புராம்பட்டு, ஆற்காவடி பகுதிகளில் உள்ள ஏரிகளில் அனுமதி யின்றி மண் அள்ளப்படுகிறது.இதனால், பல இடங்களில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், மண் எடுத்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கும்.அவ்வாறு நீர் நிரம்பும்போது, சிறுவர்கள் ஆழம் தெரியாமல் இறங்கி உயிரி ழிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் ஏரிகளில் முறையாக மண் அள்ளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.அனுமதியின்றி இரவு நேரங்களில் மண் அள்ளும் நபர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Sep-2024