திருக்காவிலுாரில் துப்புரவு ஆய்வாளர் பணி நிரப்பப்படுமா?
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பிறப்பு, இறப்பு சான்று பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.திருக்கோவிலுார் நகராட்சியின் துப்புரவு ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நகராட்சியில் பதிவு செய்து, சான்றிதழ் வழங்க வேண்டும். மேலும் இறப்புச் சான்றிதழ்களும் பதிவு செய்து, விசாரணை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். திருக்கோவிலுார் நகராட்சிக்கு கூடுதல் பொறுப்பு வகிக்கும் கள்ளக்குறிச்சி துப்புரவு ஆய்வாளர் தினசரி பணி மேற்கொள்ள முடியாத சூழலில், சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் பலரும் அலை கழிக்கப்படுகின்றனர்.இக்குறையைப் போக்க திருக்கோவிலுார் நகராட்சிக்கு நிரந்தர துப்புரவு ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.