மேலும் செய்திகள்
பெட்டி கடையில் குட்கா பறிமுதல்
13-Jul-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை செய்தனர். அதில் சிவக்குமார் மனைவி சாந்தி, 55; என்பவர் பெட்டிக் கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிந்தது. கள்ளக்குறிச்சி போலீசார் சாந்தி மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
13-Jul-2025