மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
04-Nov-2025
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
04-Nov-2025
வாகனம் மோதி மூதாட்டி பலி
04-Nov-2025
அக்ராயபாளையம் கோவில் கும்பாபிஷேகம்
04-Nov-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் ஆங்கிலத்துறை நாபியா கரீம், வணிகவியல் துறை சுகந்தி முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை அம்பிகா வரவேற்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தழகி, கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் ரம்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.கல்லுாரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆனந்தி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை சித்ரா, உமா, சங்கீதா, பிரேமா, சபீதா உள்ளிட்ட ஒருங்கிணைப்புக்குழுவினர் செய்திருந்தனர்.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆனந்தி நன்றி கூறினார்.
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025
04-Nov-2025