உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணி புறக்கணிப்பு போராட்டம்

பணி புறக்கணிப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத் துறை அலுவலகம் முன், பணியை புறக்கணித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பத்திரப்பதிவு துறை தனியார் மயமாக்கப்படும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 12 இணை சார்பதிவாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் மற்றும் தட்டச்சு ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுதும் நிலம் வாங்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை