உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர்-1 மற்றும் கள்ளக்குறிச்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட சிறப்பு சிறார் பிரிவில் பணியாற்றிட ஏதுவாக சமூகப்பணியாளர்-2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பாதுகாப்பு அலுவலர் சாரா பணியிடத்திற்கு ரூ.27,804 தொகுப்பூதியம் வழங்கப்படும்.இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், குழந்தை மேம்பாடு, மனித உரிமைகள் பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சமூக நலன் சார்ந்த துறையில் திட்ட உருவாக்கம், செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட பணி அனுபவம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும். 42 வயதிற்குள் இருக்க வேண்டும். சமூகப் பணியாளர்கள் பணியிடத்திற்கு ரூ.18,536 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.கணினி அனுபவம் வேண்டும். 42 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான படிவத்தில் வரும் ஜன., 28க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.39/40, எஸ்.எம்.ஜி. இல்லம், கிரிஜா முருகன் மருத்துவமனை பின்புறம், நேப்பால் தெரு, கள்ளக்குறிச்சி - 606202. போன் : 04151 225600, மொபைல் :6369107620 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை