உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மீது பைக் மோதல் தொழிலாளி பலி

லாரி மீது பைக் மோதல் தொழிலாளி பலி

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தார். வாணாபுரம் அடுத்த அரியலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் சக்திவேல், 31; இவர், தனது மனைவி தமிழ்செல்வி, 23; ஒரு வயது மகள் இஷானிக்கா ஆகியோருடன் பெங்களூருவில் தங்கி, பூக்கடையில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக மூவரும் சொந்த ஊரான அரியலுாருக்கு வந்தனர். மகள் இஷானிக்காவின் முதல் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக சங்கராபுரத்தில் வாழ்த்து பேனர் அச்சிட கொடுத்தனர். தயாரான பேனரை வாங்குவதற்காக சக்திவேலும், அதே ஊரை சேர்ந்த சூர்யா, 25; என்பவரும் நேற்று முன்தினம் இரவு பல்சர் பைக்கில் சங்கராபுரத்திற்கு சென்றனர். அத்தியூர் வனப்பகுதி அருகே, சக்திவேல் ஓட்டிச் சென்ற பைக், நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் சக்திவேல் இறந்தார். சூர்யா சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை