மேலும் செய்திகள்
வாகன சோதனை 26 பேர் மீது வழக்கு
21-Dec-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி நேற்று காலை வாகன சோதனை மேற்கொண்டார்.அப்போது பல்சர் பைக்கில் வந்த சவேரியார்பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி,35; என்பவரை மடக்கி உரிய ஆவணங்களை போலீசார் கேட்டபோது, குடிபோதையில் இருந்த அந்தோணிசாமி, போலீசாரை திட்டி தாக்க முயன்று, போலீசாரின் கையில் இருந்த சுவாச பகுப்பாய்வு இயந்திரத்தை பிடுங்கி, கீழே வீசி எறிந்து சேதப்படுத்தினார். புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் அந்தோணிசாமியை கைது செய்து, அவரிடமிருந்து பல்சர் பைக்கை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.
21-Dec-2024