உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பலாத்காரம் செய்து பெண் கொலை தலைமறைவான வாலிபர் கைது

பலாத்காரம் செய்து பெண் கொலை தலைமறைவான வாலிபர் கைது

சின்னசேலம்,:சின்னசேலம் அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த திம்மாபுரம், வடக்கு காட்டுக்கொட்டகையை சேர்ந்த 28 வயது பெண்; கணவரை இழந்த இவர், தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.அப்பெண் டிச. 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு பால் ஊற்றுவதற்காக நாக்குப்பம் கிராமத்தில் உள்ள பால் சொசைட்டிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மறுநாள் 28ம் தேதி காலை 8:00 மணிக்கு, வீட்டின் அருகே உள்ள மக்காச்சோள வயலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சின்னசேலம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து, எஸ்.பி., ரஜத் சதுர்வேதி மேற்பார்வையில், 5 தனிப்படை அமைத்து விசாரித்தனர்.அதில் கிடைத்த தகவலின் பேரில், நாகுப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை மகன் குமரேசன், 32; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் குமரேசன், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது: பேக்கரியில் வேலை செய்து வரும் குமரேசன் டிச. 27ம் தேதி மாலை தனது நண்பர்களுடன், அப்பெண்ணின் வீட்டின் அருகே மது அருந்தி உள்ளார். சற்று நேரத்தில், குமரேசனின் நண்பர்கள் வேலை இருப்பதாக கூறி கிளம்பி சென்று விட்டனர்.தனியாக போதையில் இருந்த குமரேசன், பால் சொசைட்டிக்கு சென்று வந்த பெண்ணை வழிமறித்து, தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். அப்பெண் மறுத்ததோடு, குமரேசனை கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த குமரேசன், அப்பெண்ணை தாக்கியதில் மயங்கி விழுந்தவரை அருகில் உள்ள மக்காச்சோள வயலுக்கு இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.மயக்கம் தெளிந்து எழுந்து கூச்சலிட முயன்ற பெண்ணை, குமரேசன் கழுத்தை நெரித்து கொலை செய்து, மீண்டும் பலாத்காரம் செய்து தப்பிச் சென்று விட்டார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். குமரேசனை கைது செய்த போலீசார், அவரை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி