இளைஞர் காங்., ரத்ததான முகாம்
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்., சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாளை முன்னிட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் இளைஞர் காங்., சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இளைஞர் காங்., மாவட்ட தலைவர் தங்கத்தமிழன் தலைமை தாங்கினார். 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததானம் வழங்கினர். எஸ்.சி. எஸ்டி., மாநில துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இதயத்துல்லா, நகரத் தலைவர் நல்ல குழந்தைவேல், வட்டாரத் தலைவர் ஷேக்சவாத், சேவா தளம் மாவட்ட தலைவர் முருகன், மகளிர் அணி அமுதா, நிர்வாகிகள் கண்ணதாசன், முகமது , வில்சன், தினகரன், ஜெயச்சந்திரன், சண்முகம், ராமச்சந்திரன், காசிநாதன், நவாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.