மின் கம்பம் மீது பைக் மோதி வாலிபர் பலி
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே மின் கம்பத்தின் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.உளுந்துார்பேட்டை, கீரனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராகுல், 21; கூலி வேலை செய்து வந்தார். இவர், நேற்று மாலை 5:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த எம்.எஸ்.தக்கா பகுதியில் இருந்து அஜீஸ் நகருக்கு பைக்கில் சென்றார்.அஜீஸ் நகர் ரவுண்டான அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார்.புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.