உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்டார்ட் அப்களிடம் பொருள் வாங்க பொதுத்துறை நிறுவனங்கள் தயக்கம்

ஸ்டார்ட் அப்களிடம் பொருள் வாங்க பொதுத்துறை நிறுவனங்கள் தயக்கம்

சென்னை: பொதுத்துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களிடம் இருந்து வாங்கு-வதில் தயக்கம் காட்டுவதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அரசுக்கு தொழில்முனைவோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசின் கீழ் மின் வாரியம், உப்பு நிறுவனம், சிமென்ட் நிறுவனம் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் செயல்-படுகின்றன. அவை இணையதள 'டெண்டர்' கோரி குறைந்த விலைப் புள்ளி வழங்கும் நிறுவனங்களிடம் இருந்து தங்களுக்கு தேவைப்-படும் சாதனங்கள், பொருட்களை வாங்குகின்றன. 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களின் சந்தை வாய்ப்பை அதிகரிப்பதற்காக, 50 லட்ச ரூபாய் வரை, உற்பத்தி துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்-களை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் வகை-யில், ஒப்பந்த விதியை அரசு தளர்த்தியுள்ளது. ஆனால், பல பொதுத்துறை நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவ-னங்களிடம் பொருட்களை வாங்காமல் அலட்சியம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து, தொழில்முனைவோர் தரப்பில் கூறியதாவது:புத்தொழில் நிறுவனங்கள் எல்.இ.டி., பல்பு, டியூப் லைட், எழுது பொருட்கள் என பலவிதமான பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. எங்களின் தயாரிப்புகளை வாங்குமாறு பொதுத்-துறை நிறுவனங்களை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. எனவே, ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்கப்படுவதை உறுதி செய்வதற்கு, சிறப்பு கண்காணிப்பு பிரிவை அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் ஆண்டு அறிக்-கையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடம் வாங்கிய விபரத்தை கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என அறிவிக்க வேண்டும். இவ்வாறு தொழில்முனைவோர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை