மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலக பெயர் அழிப்பு வடமங்கலத்தில் அட்டூழியம்
4 hour(s) ago
பெரிய காஞ்சிபுரம் தர்காவில் நாளை சந்தனகுட உத்சவம்
4 hour(s) ago
வரும் 11ல் 5 இடங்களில் ரேஷன் குறைதீர் முகாம்
4 hour(s) ago
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புத்தகரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முத்து கொளக்கியம்மன் கோவில் உள்ளது.முத்து கொளக்கியம்மனை அப்பகுதியினர் கிராம தேவதையாக வழிபட்டு வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடக்கும்.அப்போது தேர் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில், கோவிலுக்கான தேர் பழுதானதை அடுத்து, புதிய தேர் ஏற்படுத்த பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அக்கோரிக்கையை ஏற்று, பொதுநல நிதியில் இருந்து, 28.40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் திருப்பணி நேற்று துவங்கியது.இதுகுறித்து, அப்பகுதி ஊராட்சி தலைவர் நந்தகுமார் கூறியதாவது:கோவிலில் புதியதாக அமைக்கும் தேர், 27.3 அடி உயரமும் , 10 அடி அகலம், 4 நிலைகள் கொண்டு உருவாக்கப்பட உள்ளது. இப்பணி அடுத்த 6 மாதத்தில் நிறைவு பெறும் மேலும், இக்கோவிலின் வரலாற்றை கூறும் வகையில் சிற்பங்களும் தேரில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.தேர் திருப்பணி துவக்க விழாவில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை மாவட்டக் குழு தலைவர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago