உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி மாநகராட்சி கூட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு

காஞ்சி மாநகராட்சி கூட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு

சென்னை: காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், 2022ல் நடந்தது. இந்த தேர்தலில், 16வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக சாந்தி துரைராஜனும், 34வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக பிரவீன்குமாரும் வெற்றி பெற்றனர்.இருவரும், கடந்த 3ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்ற தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.மனுவில், 'காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், செப்., 3ல் நடந்தது. இந்த கூட்டத்தில், மொத்தமுள்ள 96 தீர்மானங்களில், 3 மற்றும் 4 ஆகிய தீர்மானங்கள், விவாதத்துக்கு உட்படுத்தப்படும்' என, மேயர் அறிவித்தார்.மற்றவை விவாதம் ஏதும் நடத்தாமல் நிறைவேற்றப்பட்டன. இது, தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான விதிகளுக்கு எதிரானது.எனவே, சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் செப்., 3ல் நடந்த கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.மேலும், மாநகராட்சி கமிஷனர், மேயர் ஆகியோர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இம்மனுவுக்கு காஞ்சிபுரம் கலெக்டர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக மகாலட்சுமி உள்ளார். இவர் பதவியேற்றதில் இருந்து, அவருக்கும், சில கவுன்சிலர்களை தவிர மற்றவர்களுக்கும், தொடர்ந்து ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. அவர் மீது, சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, தி.மு.க., தலைமை தலையீடு காரணமாக, மகாலட்சுமி பதவியை தக்கவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை