உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆபத்தாக திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி

ஆபத்தாக திறந்து கிடக்கும் மின் இணைப்பு பெட்டி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில், பழைய ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டடம் அருகே, அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.இங்கு, 15 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வருகின்றனர். இதுதவிர, கர்ப்பிணி பெண்களுக்கு, அங்கன்வாடி மைய பொறுப்பாளர் ஊட்டச்சத்து இணை உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.இருப்பினும், இந்த அங்கன்வாடி மையம் அருகே, சிறு மின் விசை நீர் தேக்க தொட்டியின் மின் இணைப்பு பெட்டி ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது. இந்த அங்கன்வாடி மையத்திற்கு வரும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு, ஆபத்தாக திறந்திருக்கும் மின் பெட்டியால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் புரிசை அங்கன்வாடி மையம் அருகில், ஆபத்தான முறையில் திறந்து கிடக்கும் மின் பெட்டியை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ