உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கதவு உடைந்து தொங்கிய லாரி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சம்

கதவு உடைந்து தொங்கிய லாரி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சம்

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - - வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பேருந்து, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் இந்த சாலையின் வழியே சென்று வருகின்றனர்.இந்நிலையில், நேற்று, இந்த சாலையில் சென்ற லாரியின் பின்புற கதவு உடைந்து விழும் நிலையில் ஆபத்தான முறையில் சென்றது. இதனால், இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வந்தனர்.எனவே, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செல்லும் லாரிகளை, போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ