மேலும் செய்திகள்
வில்வித்தை போட்டியில் வென்ற காஞ்சி மாணவ -- மாணவியர்
11 hour(s) ago
வளத்தோட்டம், : காஞ்சிபுரத்தில் ஒன்றியம், வளத்தோட்டம் ஊராட்சி, பிரதான சாலை வழியாக, திருவண்ணாமலை மாவட்டம், துாசி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு பலர் சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், மேட்டு காலனி அருகில், சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் கால்வாயின் மீது சிறுபாலம் உள்ளது.இந்த சிறுபாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது, கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, வளத்தோட்டத்தில் மழைநீர் செல்லும் கால்வாயின் சிறுபாலத்திற்கு இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
11 hour(s) ago