உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, கள்ளமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 25; உத்திரமேரூர் பகுதியில் தனியார் பைனான்ஸில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் உத்திரமேரூர் அடுத்த, வாடாதவூரில் இருந்து, இருசக்கர வாகனம் மூலம் திருப்புலிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, தனக்கு முன்னே சென்றுக் கொண்டிருந்த லாரி ஓட்டுனர், திடீரென பிரேக் போட்டதால், சந்தோஷ்குமார் லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதிக் கொண்டார்.இதில், தலை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உத்தரமேரூர் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்

















சமீபத்திய செய்தி