உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடைந்து விழும் நிலையில் சாத்தணஞ்சேரியில் மின்மாற்றி

உடைந்து விழும் நிலையில் சாத்தணஞ்சேரியில் மின்மாற்றி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சாத்தணஞ்சேரி கிராமம். இக்கிராம ஏரிக்கரை அருகே சாலையோரம் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி மூலம், சாத்தணஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாய நிலங்களில் உள்ள நீர் உறிஞ்சும் மின் மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின்கம்பம், சில மாதங்களாக சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இதனால், காற்று, மழைக்கு எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழக்கூடும் என அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதமான பழைய மின்மாற்றியை அப்புறப்படுத்தி அப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DARMHAR/ D.M.Reddy
மே 16, 2024 01:04

மின் மாற்றி மரக்கம்பங்களில் ஏற்றப்பட்டிருந்தால் அந்த கம்பங்களை அகற்றி இரும்பு கம்பங்களில் ஏற்றப்பட வேண்டும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ