உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஜயராகவப்பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் 

விஜயராகவப்பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் 

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு, ஜடாயு தீர்த்த குளம் உள்ளது. ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, நேற்று பிதுார் வழிபாடு என, அழைக்கப்படும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.குறிப்பாக, ஜாடாயு தீர்த்த குளத்தை ஓட்டி அமர்ந்திருந்த வேதியர்களிடம், திருப்புட்குழி, புதுப்பாக்கம், கம்மவார்பாளையம், படுநெல்லி, தாமல், முசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நீண்ட வரிசையில் நின்று, அவரவர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அதன் பிறகு, விஜயராகவப்பெருமாள் மற்றும் மரகதவல்லி தாயாரை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி