உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வில்லிவலம் பாலத்தில் கற்கள் குவிப்பு

வில்லிவலம் பாலத்தில் கற்கள் குவிப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கருக்குப்பேட்டை கிராமத்தில் இருந்து, பெண்டை கிராமம் வழியாக, வில்லிவலம் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.இச்சாலை குறுக்கே, வேகவதி ஆறு கடந்து செல்கிறது. கடந்த, 'வர்தா' புயலுக்கு தரைப்பாலம் சேதமடைந்தது.இதையடுத்து, வில்லிவலம் ஊராட்சியில், ‛நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தது.‛மாண்டஸ்' புயல் காரணமாக, தரைப்பாலத்தின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. சீரமைக்கும் பணிக்கு சிமென்ட் கற்களை பெயர்த்து எடுத்துள்ளனர்.இது, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, சாலை ஓரம் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பெண்டை கிராம மக்கள் கருக்குப்பேட்டை பஜாருக்கு செல்லும் போது இடையறாக உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோரம் சிமென்ட் கற்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை