உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை

சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய தாலுகாக்களில், 103 விதை விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. சம்பா பருவத்திற்கு, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைக்கும் வகையில், விதை ஆய்வு துறையினர் ஆய்வு செய்கின்றனர். விதை விற்பனையின் போது, முளைப்பு திறன் கூடிய தரமான விதைகள் மற்றும் ரசீது வழங்க வேண்டும். சான்று பெறாத விதைகளை விற்பனை செய்தால், விற்பனையாளர்கள் மீது விதைகள் சட்ட விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண் துணை இயக்குனர் ரவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ