உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கனரக வாகனங்கள் அடாவடி; பார்க்கிங் ஆக மாறிய சாலை

கனரக வாகனங்கள் அடாவடி; பார்க்கிங் ஆக மாறிய சாலை

மதுரமங்கலம்: மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில், தனியார் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, டயர் லோடு ஏற்றி செல்வதற்காக, தினமும் கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.தனியார் தொழிற்சாலைக்குள் செல்வதற்கு, லாரி ஓட்டுனர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளன. இதுபோன்ற நேரங்களில், கண்ணன்தாங்கல் மற்றும் பள்ளூர்- - சோகண்டி சாலையோரம் நீண்ட நேரம், லாரிகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.இதனால், கண்ணன்தாங்கல் செல்லும் சாலையில், மற்றொரு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், குணகரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் மற்றும் கண்ணன்தாங்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தடை விதிக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ