உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

அரசு பள்ளிக்கு ரூ.49 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 255 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், போதிய வகுப்பறை வசதி இல்லாதால், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ‛மொபிஸ்' தனியார் நிறுனத்தின் வாயிலாக 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கூடுதலாக இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்ட முடிவெடுக்கப்பட்டது.இதையடுத்து, வகுப்பறை கட்டடங்கள் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில், மொபிஸ் இந்திய நிறுவனத்தின் துணை பொது மேளாலர் பாலாஜி முன்னிலை வகித்து, புதிய பள்ளி வகுப்பறை மற்றும் கழிப்பறை கட்டடங்களை திறந்து வைத்தனர்.இதில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எழில், வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் இனியசெல்வி, சி.எஸ்.ஆர்., நிறுவனத்தை சேர்ந்த பாலாஜி, அஜய், சுதிர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை