உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க செயலர்களுக்கு அறிவுரை

பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க செயலர்களுக்கு அறிவுரை

ஸ்ரீபெரும்புதுார்:பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், கட்டுமான பணிகள் நிறைவு பெறாத, ஊராட்சிகளில் பணிகளை விரைந்து முடிக்க, ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்து, ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இதில், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட 58 ஊராட்சியைச் சேர்ந்த, ஊராட்சி செயலர்கள் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், திட்டம் சார்ந்தவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. இதில், குடிசையில் வசிக்கும் மக்களுக்கு, கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவது குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும், இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யும் முறைகள், வீட்டின் அலகுத்தொகை, பணிகள் மேற்கொள்ளும் விபரங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதேபோல, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், பணி நிறைவு பெறாமல் உள்ள, வீடுகளை விரைந்து முடிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் புதிதாக குளம் அமைக்கும் பணி குறித்து வழிகாட்டி நெறிமுறை, மரக்கன்று நடுதல், பராமரித்தல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை