உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது

பணி முடிந்தும் திறக்கப்படாத கழிப்பறை வாகனம் நிறுத்தும் இடமாக மாறியது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில், 2021 - 22 துாய்மை இந்தியா திட்டம் 2.0 சார்பில், 36.28 லட்சம் ரூபாய் செலவில் பொது கழிப்பறை கட்டப்பட்டது.அப்பகுதிவாசிகள் மட்டுமின்றி கழிப்பறை அருகில் உள்ள அனேகதங்காவதேஸ்வரர், கைலாசநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பறை கட்டடம் கட்டுமானப் பணி இரு மாதங்களுக்கு முன் முடிக்கப்பட்டது.கட்டுமானப் பணி முடிந்த நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் பொது கழிப்பறை கட்டடம் திறப்பு விழா நடத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.இதனால், கழிப்பறை வளாகம் வாகனம் நிறுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ளதால், கைலாசநாதர் கோவில் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில் கட்டப்பட்டுள்ள புதிய கழிப்பறை கட்டடம் அடுத்த வாரம் திறப்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை