உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகில இந்திய பீச் வாலிபால்32 கல்லுாரிகள் பலப்பரீட்சை

அகில இந்திய பீச் வாலிபால்32 கல்லுாரிகள் பலப்பரீட்சை

சென்னை, காட்டாங்கொளத்துாரில் நேற்று துவங்கிய, அகில இந்திய கல்லுாரிகளுக்கு இடையிலான பீச் வாலிபால் போட்டியில், 32 அணிகள் பங்கேற்றுள்ளன. சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை இயக்குனரகம் சார்பில், அகில இந்திய பீச் வாலிபால் போட்டி, நேற்று துவங்கியது.போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் பல்கலை வளாகத்தில் உள்ள பீச் விளையாட்டு திடலில் நடக்கிறது.'நாக் -- அவுட்' முறையில் நடக்கும் இப்போட்டியில், இருபாலரிலும் தலா 16 என, மொத்தம் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.போட்டிகள், தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கின்றன. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.நேற்று காலை, பெண்களுக்கான, 'நாக் - அவுட்' போட்டிகள் துவங்கி நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை