உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரேஷன் கடை அங்கன்வாடி மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு

ரேஷன் கடை அங்கன்வாடி மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கும் ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் பல போதிய இடவசதியின்றி இயங்கி வருகின்றன.அதில், 9வது வார்டுக்குட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் மாட வீதியில் இயங்கும் ரேஷன் கடை 18.5 லட்ச ரூபாயும், 29வது வார்டில் இயங்கும் ரேஷன் கடைக்கு 15.2 லட்சமும் காஞ்சிபுரம் தி.மு.க.,-எம்.எல்.ஏ., எழிலரசன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், 18வது வார்டில் சீனிவாசா பள்ளி வளாகத்தில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட 15.5 லட்சமும், வி.என்.பெருமாள் கோவில் தெருவில் புதிய அங்கன்வாடி மையம் கட்ட 15.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கான பணிகளுக்கு, மாநகராட்சி நிர்வாகம் தற்போது 'டெண்டர்' விட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ