உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்த ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலி

படப்பை:கூடுவாஞ்சேரி அடுத்த நெல்லிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானதுரை, 50. இவர், படப்பை மின்வாரியத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியில் உள்ள 'எம்பயர் அவன்யு' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுது பார்க்கும் பணியில் ஞானதுரை தனியாக ஈடுப்பட்டார்.அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், டிரான்ஸ்பார்மரில் தொங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரியத்தினர், மின்சாரத்தை துண்டித்து ஞானதுரை உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை