மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
5 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
6 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
9 hour(s) ago
காஞ்சிபுரம்:தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலமாக, பொருளாதார முன்னேற்றத்திற்கு, பல்வேறு கடனுதவி வழங்கி வருகிறது.இந்த கடனுதவி பெற விண்ணப்பிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர், 18 -- 60 வயது வரையில் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம், 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.சிறு வணிகம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள், மரபு சார்ந்த தொழில்களுகு, 15 லட்சம் ரூபாய் வரையில் வழங்கப்படும். கடனுக்கு, 7 சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும்.கடனுதவி பெற www.tabcedco.tn.gov.inஎன்ற இணைய தளத்தில், விண்ணப்பம் படிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பம், ஜாதி, வருமானம், பிறப்பிடம், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கிகளில் கோரும் ஆவண நகல்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
5 hour(s) ago
6 hour(s) ago
9 hour(s) ago