துணை இயக்குனர் நியமனம்
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலை துணை இயக்குனராக மோகன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.அவருக்கு பதிலாக, சென்னை தோட்டக்கலை அலுவலகத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த லட்சுமி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்று கொண்டார்.