உத்திரமேரூரில் விழிப்புணர்வு பேனர்
உத்திரமேரூர், உத்திரமேரூரில், தாலுகா அலுவலகம், பி.டி.ஒ., அலுவலகம், சார் - பதிவாளர்அலுவலகம், காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன.இந்த அலுவலகங்களுக்கு, சுற்றுவட்டார 60-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பேருந்துகள் வாயிலாக தினமும் வந்து செல்கின்றனர்.இதனால், உத்திரமேரூர் பேருந்து நிலையம் எப்போதும் அதிக மக்கள் நடமாட்டத்துடன் காணப்படுவது வழக்கம். அவ்வாறு பேருந்து நிலையத்திற்கு வருவோர், மொபைல்போன், பணம், நகை ஆகியவை அடிக்கடி திருடப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து நடத்துநர்களின் டிக்கெட் மிஷின்களும் சமீபத்தில் திருடு போனது.இது குறித்து பொதுமக்கள் சார்பில், காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுவந்தது.அதன்படி, பேருந்து நிலையத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க, திருடர்களின் படங்கள் அடங்கிய விழிப்புணர்வு பேனர், உத்திரமேரூர் காவல் துறை சார்பில் வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.