| ADDED : ஜூலை 17, 2024 04:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணி முறையாக நடைபெறாமல், அதற்கான கட்டணத்தை ஒப்பந்த நிறுவனம் தாறுமாறாக வசூலிப்பதாக, மாவட்ட பா.ஜ., தலைவர் பாபு, கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.மனு விபரம்:காஞ்சிபுரத்தில் ஓடும் மஞ்சள்நீர் கால்வாய் துர்வாரும் பணி முறையாக நடைபெறாமல், விதிமுறைகளை பின்பற்றாமல், திட்டத்திற்கான பணம் வழங்கப்பட்டுள்ளது.மாநகராட்சியில் குப்பை அகற்றும் பணிகள் முறையாக நடைபெறாமல், அதற்கான கட்டணம் தாறுமாறாக ஒப்பந்த நிறுவனம் வசூலிக்கிறது. இதனால், அரசு பணம் வீணாவதோடு, எதிர்பார்த்த துாய்மை பணியும் நடைபெறாமல், ஒரு சிலர் பலனடைகின்றனர்.பேருந்து நிலைய கழிப்பறைகள் டெண்டர் விடாமல், அரசியல் கட்சியினர் சார்ந்தவர்கள், கழிப்பறையை ஆக்கிரமித்து மக்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர். மாநகராட்சியின் இந்த நிர்வாகத்தால், கமிஷனர், பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.