உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குழந்தைக்கு மூளையில் பாதிப்பு; உதவி கேட்டு கலெக்டரிடம் மனு

குழந்தைக்கு மூளையில் பாதிப்பு; உதவி கேட்டு கலெக்டரிடம் மனு

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், சி.வி.பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் செல்வம் - பிரியா தம்பதிக்கு, எட்டு வயது பெண் குழந்தை உள்ளது. இவருக்கு மூளையில் பிரச்னை இருப்பதால், வளர்ச்சியின்றி, உடலில் பாதிப்புடன் குழந்தை உள்ளது.இந்நிலையில், தன் குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதால், மருத்துவ சிகிச்சை உதவி கேட்டு, தந்தை செல்வம், கலெக்டரிடம் நேற்று, மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.மனு விபரம்:கடந்த 2016ல், எங்க ளுக்கு லிசிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபோது, ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.பின்னாளில், மூளையின் இடது பக்கம் பாதிப்பு இருப்பதாக கூறினர். அது முதல் குழந்தையை காப்பாற்ற என்னிடம் உள்ள சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டேன்.தற்போது எனக்கு காலில் அடிபட்டு மேற்கொண்டு சிகிச்சைக்குசெலவிட முடியாத நிலையில் இருக்கிறோம்.என் குழந்தைக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால், மன உளைச்சலில் நாங்கள் உள்ளோம்.என் பெண் குழந்தையை காப்பாற்ற, மருத்துவ உதவி செய்யும்படி, கலெக்டரிடம் கேட்டுக் கொள்கிறன்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை