உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவி பொறியாளர் கைது

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மதுகர், 49. இவர் மணவாளநகர் பகுதியில் கார் 'சர்வீஸ்' சென்டர் நடத்தி வருகிறார். சர்வீஸ் சென்டருக்கு 'சிங்கிள் பேஸ்' மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தார். சில நாட்களுக்கு முன், மும்முனை மின் இணைப்பு பெற பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கு உதவி பொறியாளர் கஜேந்திரன், 52 என்பவர் மும்முனை 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து மதுகர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் போலீசார் ரசாயனம் தடவிய, 2,500 ரூபாய் நோட்டுகளை மதுகரிடம் கொடுத்து உதவி பொறியாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.நேற்று பெரியகுப்பம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற மதுகர் ரசாயனம் தடவிய நோட்டுகளை, உதவி பொறியாளர் கஜேந்திரனிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை