சேதமடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
வாலாஜாபாத் வட்டாரம், ஆசூர் கிராம காலனியின் ஏரித்தெரு பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளின் மின் இணைப்புக்காக தெருவில் மின் கம்பங்கள் அமைத்து ஒயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.ஒயர்களை தாங்கி நிற்கும் கம்பங்களில் ஒன்று மிகவும் பழுதடைந்து, சிமென்ட் காரைகள் உதிர்ந்து கம்பிகளை தாங்கி நிற்கிறது. இதனால், காற்று, மழை நேரங்களில், அக்கம்பம் உடைந்து மின் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பழுதான அக்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.கோபி, ஆசூர்.